Saturday, October 10, 2015

ELCB என்றால் என்ன?


 ELCB என்றால் என்ன?

ELCB என்பது மின் கசிவு மற்றும் மின் அதிர்வு(ஷாக்) ஆகியவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் கருவியாகும்.



நம் வீட்டில் எங்காவது மின் கசிவு ஏற்பட்டால் மின்சாரம்எந்த ஒரு பயனும் இல்லாமல் வீணாகும். நாம் உபயோகபடுத்தாமல் அதற்கு கட்டணம் செலுத்தவேண்டும்.

இதுபோன்று மின்சாரம் வீணாகாமல் இது தடுக்கிறது. மின் கசிவு ஏற்பட்டால் உடனே உங்கள் வீட்டின் மெயின் சப்ளை துண்டிக்கப்படும். இதன் மூலம் நீங்கள் மின்கசிவோ அல்லது மின்அதிர்வோ ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். மேலும் நம் வீட்டிலுள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மின்சாரத்தை தொட நேரிடும் பொழுதுஉடனே உங்கள் வீட்டின் மெயின் சப்ளை துண்டிக்கப்பட்டு அவர்களை மின் அதிர்வில் இருந்து பாதுகாக்கிறது.
ஆகவே ELCB உங்கள் பணத்தையும் உயிரையும் பாதுகாக்கிறது.

இதை share செய்வதின் மூலம் யாரேனும் பயன் பெறலாம்

Tuesday, August 18, 2015

மின் அதிர்வு ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?



       மின் அதிர்வு என்றால் என்ன?


மனித உடலானது மின்சாரத்தை கடத்தகூடிய தன்மை கொண்டது. ஈரமான சூழ்நிலையில் மனித உடலில் மின்சாரம் எளிதில் பாய கூடியது எனவேதான் ஈரமான சூழ்நிலையில் ஏற்படும் மின் அதிர்ச்சியானது மிக பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.



மின்சாரம் செல்லும் ஒரு கடத்தியை தொட நேரிடும் போது நம் உடல்வழியே மின்சாரம் கடத்தப்பட்டு நமக்கு மின் அதிர்ச்சி ஏற்படுகிறது.


இதன் விளைவாக நரம்பு மண்டலம், இதயம், நுரையீரல், மூளை ஆகியவை பாதிக்கப்படுகின்றன.அதிக மின்னழுத்தமுள்ள மின்சாரம் பாய்வதினால் மரணம் கூட ஏற்படலாம்.


எனவே மின்சாரம் என்பது எவ்வளவு முக்கிய தேவை என்ற போதிலும் அதை சரியான முறையில் பயன்படுத்த தவறினால் உயிர் இழப்பும் பொருள் இழப்பும் ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்



             மின் அதிர்வு ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?




ஈரமான கைகளால் சுவிட்ச்சை ஆன் செய்யவோ ஆஃப் செய்யவோ கூடாது.


நீங்கள் பயன்படுத்தும் மின்சாதனங்களின் இணைப்பு ஒயர்கள் துண்டிக்கபட்டிருந்தால் உடனே அதை மாற்ற வேண்டும்.


மின் சாதனங்களை நன்கு இயக்கும் முறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


பழுதடைந்த மின்சார ஒயர்களை ஒயரிங் வேலைக்கோ அல்லது இணைப்புகளுக்கோ பயன்படுத்தகூடாது.


மின் இணைப்புகளுக்கு பயன்படும் சுவிட்ச்,பிளக் போன்றவை கீறல் விழாமலும் உடையாமலும் இருக்க வேண்டும்.உடைந்து இருந்தால் மின் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

மின்சாதனங்களுக்கு கண்டிப்பாக எர்திங் செய்யப்பட்டுருக்க வேண்டும்.


சாக்கெட்டிலிருந்து (socket)நமது பேச்சு வழக்கில் பிளக் (plug) மின் சப்ளை எடுக்கும்போது பிளக் டாப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.ஒயருடன் பிளக்கில் குச்சி செருகி வைத்து பயன்படுத்தகூடாது.

மின்சாதனங்கள் பழுதடைந்தால் நன்கு அனுபவம் பெற்ற நபர்களை கொண்டே பழுது பார்க்கவேண்டும் மாறாக நாமே பழுது பார்க்ககூடாது அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.


             மின் அதிர்வு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்




மின்சாரத்தால் தாக்குண்டவரை உடனடியாக மின் தொடர்பிலிருந்து விடுபட வைக்கவேண்டும் இதற்கு மெயின் சுவிட்சை ஆஃப் செய்ய வேண்டும்


உலர்ந்த கட்டை அல்லது குச்சியை கொண்டு அவர் உடம்பில் நமது உடல்படாமல் மின் இணைப்பில்இருந்து தள்ளிவிட வேண்டும்.


மின் அதிர்வுக்கு உள்ளானவர் சுய நினைவை இழந்தவராக இருந்தால் அவரது மார்பு, கழுத்து, இடுப்புவரை உள்ள ஆடைகளை தளர்த்திவிட்டு நன்கு அவர் மூச்சு விட உதவி செய்ய வேண்டும். அவர் முகத்தில் குளிர்ந்த தண்ணீரை தெளிக்க வேண்டும்


மின் அதிர்வுக்கு உள்ளானவர் சுய நினைவு உடையவராக இருந்தால் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும்.

இதை share செய்வதின் மூலம் யாரேனும் பயன்பெறலாம்